‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்குப் பிறகு புதிய குற்றப் புலனாய்வு: சித்து–தர்ஷிகா மீண்டும் இணையும் ‘தி லாஸ்ட் கேஸ்’
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்குப் பிறகு புதிய குற்றப் புலனாய்வு: சித்து–தர்ஷிகா மீண்டும் இணையும் ‘தி லாஸ்ட் கேஸ்’
‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே படக்குழு மீண்டும் இணையும் புதிய திரைப்படம் ‘தி லாஸ்ட் கேஸ்’. இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்து கதாநாயகனாகவும், தர்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முந்தைய படத்தைப் போலவே இதுவும் குற்றம் மற்றும் புலனாய்வை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. எனினும், ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சாயல் இதில் இருக்காது என்றும், கதை சொல்லும் விதம் முதல் கதாபாத்திரங்களின் உணர்வுகள் வரை முற்றிலும் புதிய அனுபவத்தை வழங...
