வெட்னஸ்டே பட பாணியில் உருவாகியிருக்கும் சத்யராஜின் “தீர்ப்புகள் விற்கப்படும்”
தனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.
" சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி." என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.
புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், "சமுதாய...
