மலேசிய தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையை சொல்லும் “தோட்டம்”
Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "தோட்டம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்..நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார்.மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்..
ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே.
இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்..
அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே.
அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது..
தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது.
அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது....

