Wednesday, December 4
Shadow

Tag: Today

சல்மான் கானின் டபாங் 3 படப்பிடிப்பு தொடங்கியது

Latest News, Top Highlights
சல்மான் கான் - சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கும் டபாங் 3 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா இயக்கவுள்ளார். இந்த படத்தை சல்மான் கான் பிலிம்ஸ், அர்பாஸ் கான் புரோடக்ஸ் மற்றும் சப்ரான் பிராட்காஸ்டிங் மற்றும் மீடியா தயாரிக்க உள்ளது. கடைசியாக 2015-ல் சிங் இஸ் பிளிங் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார் பிரபுதேவா. அவர் இயக்கும் 7-வது ஹிந்திப் படம் இது. 2010-ல் வெளியான டபாங் முதல் பாகத்தை அபினவ் காஷ்யப்பும் 2012-ல் வெளியான இரண்டாம் பாகத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள். 2009-ல் பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படமான வாண்டட் படத்துக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் சல்மான் கான். மேலும் பிரபுதேவா இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் 4-வது படமிது....

நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...

இன்று மாலை வெளியாகிறது காஞ்சனா 3 செகன்ட் சிங்கிள்

Latest News, Top Highlights
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌ படம் காஞ்சனா 3. இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா மற்றும்பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள். மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் "காஞ்சனா 3" படத்தின் செகண்ட் சிங்கிள் 'காதல் ஒரு விழியில்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். . காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகம...