Wednesday, October 28
Shadow

Tag: #trish #rajinikanth #karthiksubburaj #sunpictures

ரஜினிகாந்த் படத்தில் த்ரிஷா நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

ரஜினிகாந்த் படத்தில் த்ரிஷா நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

Latest News, Top Highlights
திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான ‘மோகினி’ படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், 96, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். திரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இன்னும் ரஜினியுடன் மட்டும்தான் இணைந்து நடிக்கவில்லை. எந்த பேட்டி என்றாலும் திரிஷா ஏக்கமாக இதனை குறிப்பிடுவார். அவரது ஏக்கம் தற்போது தீர்ந்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது...