Sunday, March 23
Shadow

Tag: #TSK

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

Review, Top Highlights
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார். அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார். தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதி...
சூர்யாவின் 37-வது படத்தை இயக்குவது யார்?

சூர்யாவின் 37-வது படத்தை இயக்குவது யார்?

Latest News, Top Highlights
ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதனையடுத்து செல்வராகவன் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள். இதன் படப்பிடிப்பை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, சூர்யாவின் 37-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இதை சூர்யாவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘கேங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கெனவே, இவர்கள் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது....
என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

என் படத்தில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை: சூர்யா

Latest News, Top Highlights
ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ...
இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்' படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்து...