
ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதனையடுத்து செல்வராகவன் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள். இதன் படப்பிடிப்பை இம்மாதம் (ஜனவரி) இறுதியில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, சூர்யாவின் 37-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார்.
இதை சூர்யாவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘கேங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கெனவே, இவர்கள் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.