அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கத்தில் பாண்டியராஜன் நடிக்கும் ‘டியூப்லைட்’
திரையுலகை பொறுத்தவரை படைப்பாற்றல் என்பது மிக மிக முக்கியம். உலக சினிமா மூலம் தங்களின் ரசனைகளை வளர்த்துக்கொண்டே போகும் ரசிகர்கள், தங்களின் எதிர்பார்ப்புகளையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர். அப்படி ஒரு தனித்துவமான கதையம்சத்தில் உருவாகி இருக்கின்றது, 'ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்ஷன்' சார்பில் ரவி நாராயணன் தயாரித்து, அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி நடித்திருக்கும் 'டியூப்லைட்' திரைப்படம்.
புதுமுகங்கள் இந்த்ரா - அதித்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'டியூப்லைட்' திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், 'டம்மி டப்பாசு' புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் இந்த்ரா, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் (ராம்ஜியின் உதவியாளர்), படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம் (குற்றம் கடிதல்), ...
