குற்ற வலையில் சிக்கும் இளைஞனின் வாழ்க்கைப் போராட்டம்; ‘அண்டர் – 18’ படத்தின் மூலம் சமூக நிதர்சனத்தை பேசும் கார்த்திக் பெருமாள் சாமி!
குற்ற வலையில் சிக்கும் இளைஞனின் வாழ்க்கைப் போராட்டம்; ‘அண்டர் - 18’ படத்தின் மூலம் சமூக நிதர்சனத்தை பேசும் கார்த்திக் பெருமாள் சாமி!
சென்னை:
சமூகத்தின் மறைக்கப்பட்ட குற்றப் பின்னணிகளையும், அதன் தாக்கத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண குடும்பத்தின் உணர்வுப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் ‘அண்டர் - 18’ (Under - 18). எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழா, திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெகதீஸ் தயாரிக்கும் இரண்டாவது படைப்பாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநரான கார்த்திக் பெருமாள் சாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் சேத்த...
