வைபவ் நடிக்கும் பெயரிடப்படாத ரொமாண்டிக் காமெடி திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
ஒரு நடிகரிடம் அப்பாவியான முகம் இருந்தாலே அது அவருக்கு மிகப்பெரிய சொத்து. ரசிகர்களை மிக எளிதாக கவரக்கூடிய தன்மை அதற்கு உண்டு. எல்லா வகை படங்களில் நடிக்கவும் அது உதவும். அதிர்ஷ்டவசமாக நடிகர் வைபவ் இந்த குணநலன்களை பெற்றிருக்கிறார். அதனால் தான் அது பேய் படமாக இருந்தாலும், ஹாரர் காமெடி படமாக இருந்தாலும் அல்லது ரொமாண்டிக் காமெடி படமாக இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கிறார். வால்மேட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் தயாரிக்க, சாச்சி என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் வைபவ். திரைக்கதை, வசனகர்த்தா விஜியிடம் 6 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் சாச்சியும், வைபவ் பற்றி அவ்வாறே நல்ல விஷயங்களை கூறுகிறார்.
இது பற்றி அவர் கூறும்போது, "எனது கதையில் நாயகனுக்கு தேவைப்பட்ட அப்பாவியான முகம் வைபவிடம் இருந்தது. அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்...
