டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே..
‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..
“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பத...

