வீரா – திரைவிமர்சனம் (நார் நாரா) Rank 1.5/5
கிருஷ்ணா, கருணாகரன் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'வீரா' திரைப்படம். இப்படத்தை ராஜாராமன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லியோன் ஜோன்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 'கழுகு' கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா மேனன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் எப்படி இருக்கிறது?
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராஜாராமன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'வீரா'. வடசென்னை மனிதர்களின் முகங்களையும், வாழ்வியலையும் தனது சிறுகதைகளிலும், நூலிலும் வெகுசிறப்பாக பதிவு செய்திருக்கும் பாக்கியம் சங்கரின் கதை என்பதால் 'வீரா' திரைப்படத்தி...
