அஜீத், விஜய் விவகாரத்தில் வம்பில் காஜல் ?
விஜய், அஜீத்துடன் ஜோடியாக ஒரே ஹீரோயின்கள் நடிக்கும்போது அவர்கள் வம்பில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அஜீத்துடன் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த திரிஷா அவருடன் நடித்த அனுபவம் பற்றி கூறியபோது அஜீத்தை புகழ்ந்து பேசினார். அதைக்கண்டு விஜய் ரசிகர்கள் கடுப்பாகினர். விஜய்யுடன் பல்வேறு படங்களில் நடித்திருந்தும் அவரைப்பற்றி எதுவும் சொல்லாததால் திரிஷாவை விஜய் ரசிகர்கள் இணைய தளத்தில் காய்ச்சி எடுத்தனர். இதையறிந்து ஷாக் ஆன திரிஷா அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக விஜய்யை புகழ்ந்து பேசி நல்லபெயர் எடுத்துக்கொண்டார்.
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது அஜீத்துடன் ஏ.கே. 57 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் சிலர் அஜீத், விஜய் பற்றி கருத்த கேட்டனர். ஏற்கனவே திரிஷா கருத்து சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டதை அறிந்திருந்த காஜல...
