இனியும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு ‘பால்’ ஊற்றுவீர்களா? வேண்டாமே ?
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே இணைந்து தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடத்தி முடித்த போராட்டம் உலகம் முழுவதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ என்பதுதான் அனைவரையும் இணைத்த ஒரு விவகாரம். ஆனால், அதற்குள் பல விஷயங்கள் இணைந்திருக்கின்றன. நமது நாட்டு மாடுகளை அழித்து வெளிநாட்டு மாடுகளை இங்கு வளர்க்க நிர்ப்பந்திக்கும் ஒரு செயலும் அடங்கியுள்ளது. நாட்டு மாடுகள் இனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சத்துமிக்க நாட்டு மாடுகளின் பாலை நாம் அருந்தாமல், சத்தே இல்லாத வெளிநாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலைத்தான் அருந்திக் கொண்டு வருகிறோம்.
சினிமா நடிகர்கள் தங்களது போராட்டத்தால் வெளிச்சம் பெற்றுவிடக் கூடாது என போராட்டக்காரர்கள் நினைத்தாலும் அதையும் மீறி உதவி செய்கிறேன் எனச் சொல்லி சிலர் தங்களது இமேஜை வளர்த்துக் கொள்ள அதிலும...
