Wednesday, October 28
Shadow

Tag: #vijay #karunanithi #dmk

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலம் நேரில் சென்று விசாரித்த விஜய்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலம் நேரில் சென்று விசாரித்த விஜய்

Latest News, Top Highlights
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி இரவு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இது ஆஸ்பத்திரியின் வெளியே திரண்டிருந்த தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் தமிழக அரச...