ஆற்றங்கரையில் அச்சாரம் போட்ட விஜய் நம்பமுடியாத செய்தி
சர்க்கார்' படம் ரிலீஸ் ஆன பின், தீவிர அரசியலில் இறங்க நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாக, அவரது ரசிகர்கள் மன்றத்தினர் பரபரப்பான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:
நடிகர் விஜய்க்கு, தீவிரமான அரசியல் ஆசை உண்டு. அதனால் தான், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமைத்து வருவதோடு, அரசியல் பஞ்ச் டயலாக்குகளை வலிந்து திணித்து வருகிறார்.
கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், தனியாக மேடை போட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ததில் இருந்தே, அவர் தன்னுடைய அரசியலைத் துவக்கி விட்டார். ஆனால், அந்தத் தேர்தலில், அவர் நினைத்தது போல தி.மு.க., தோற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், முதல்வர் ஜெயலலிதா, தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிர அரசியலில் ஈடுபட வைப்பார் என நம்பினார் விஜய். ஆனால், அது நடக்...

