செல்வராகவன் விஜய்க்கு எழுதிய கதையில் தான் சூர்யா நடிக்கிறார் .
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன்.
இதனையடுத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன்.
இதனிடையில் சில தினங்களுக்கு முன், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய்-செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர் ஆனால் அந்த சந்தோசம் சில நாட்களே பொதுவாக விஜய் ஒரு படங்கள் முடித்தவுடன் தான் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வரும் ஆனால் இப்ப நிலைமை தல கீழ் பைரவா படபிடிப்பின் போதே அடுத்த படத்தின் அறிவிப்பு அது மட்டும் இல்லாமல் யார் இயக்குனர் என்ற குழப்பம் வேறு ஒரு வழியாக அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.
இந்நிலையில், தற்போது சூர்யாவுடன் செல்வராகவன் இணைய உள்ள படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்று தெரிய வந்...
