பிரபல நடிகை மற்றும் பெண் இயக்குனர் காலமானார்
தெலுங்கு திரையுலகில் 44 படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநரான விஜய நிர்மலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்பதால், கடந்த 2002-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், 73 வயதான விஜய நிர்மலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
விஜய நிர்மலா மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்....
