
விஜய் சேதுபதிக்கு இது இரண்டாவது முறை
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', `இமைக்கா நொடிகள்' படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இதுதவிர விஜய் சேதுபதி தற்போது `சூப்பர் டீலக்ஸ்', `96', `சீதக்காதி', `ஜுங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சிரஞ்சீவியுடன் இணைந்து `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். அதேநேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, சிம்பு, பகத் பாஷில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் விஜய...