Wednesday, October 28
Shadow

Tag: #vijaysethupathy #r.k.suresh #seenuramasamy #tamanna #aiswaryarajesh

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்

Latest News
ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "தர்மதுரை" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறினார். அவர் கூறுகையில், "சிறு வயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கேட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான். தாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முட...
தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Latest News
தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார். சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமுக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார். வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மரு...