Saturday, April 18
Shadow

Tag: #vijaysethupathy #seenuramasamy #sugumar #yuvanshankarraja

மீண்டும் இணையும் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி

மீண்டும் இணையும் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என் கண்முன்னால் தெரிவதால், மிகவும் உற்...