ஹீரோயின் ஆகிறார் விஜியின் மகள் லவ்லின்
பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். தில்லுமுல்லு படத்தில் ரஜினியின் தங்கையாக அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்தார். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் விஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் தற்போது நடித்து வருகிறார்.
விஜியின் மகள் லவ்லின், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். விஜியின் தோழி, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்கிறார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் விரையில் தொடங்குகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது....
