Thursday, April 18
Shadow

Tag: #vikram #ajayganamuthu

இந்திய சினிமாவில் புதிய சாதனை செய்யும் சியான் விக்ரம்நினைத்து பார்த்தாலே பிரமிப்பு

இந்திய சினிமாவில் புதிய சாதனை செய்யும் சியான் விக்ரம்நினைத்து பார்த்தாலே பிரமிப்பு

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தேசிய விருதையும் பெற்றவர். விக்ரம். ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாபாத்திரங்கள் வழக்கமாக இல்லாமல் மாறுபட்டு இருக்கும்.  தன் கதாபாத்திரம் சிறப்பாக  தன்னையே வருத்தி கொல்ல்வார் உடல் எடையை குறிப்பது அதிகரிப்பது தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பது என்று தன்னை மாற்றி கொள்பவர் என்றால் அது இவர் ஒருவரே கமர்ஷியல் படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தையும் அதற்கு உதாரணமாய் சொல்லலாம். அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அடுத்து விக்ரம் நடிக்க உள்ள அவருடைய 58வது படத்தில் 25 தோற்றங்களில் அவர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு 'நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் சிவாஜிகணேசன், 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 தோற்றங்கள், விரைவில் வெளிவர உள்ள 'கோமாளி' படத்தில் 10 தோற்றங்களில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ...
சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !!

சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் !!

Latest News, Top Highlights
தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார். தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன...