Saturday, June 27
Shadow

Tag: #vikramprabhu #nirmalkumar

விஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் விக்ரம் பிரபு

விஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் விக்ரம் பிரபு

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் இயக்கி இருந்தார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா நடித்திருந்தார். ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு நிர்மல் குமார் எந்தப் படத்தை இயக்கவில்லை. தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி விட்டார். இவர் அடுத்ததாக விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்க இருக்கிறார். விக்ரம் பிரபு தற்போது, ‘அசுரகுரு’, ‘துப்பாக்கி முனை’ படங்களில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...