தயாரிப்பாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தின பதிவு
சாமிக்கண்ணு வின்சென்ட் தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார். [3]தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்...