கனவுகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்… திரையில் அதிர வைக்க வரும் ‘வயலெட் கனவு’! நவம்பர் 20 வெளியாகிறது.
கனவுகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம்… திரையில் அதிர வைக்க வரும் ‘வயலெட் கனவு’! நவம்பர் 20 வெளியாகிறது.
கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் புகழ்பெற்ற கதையில், பி.நித்தியானந்தம் இயக்கியுள்ள உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!
கனவுகள் சில நேரங்களில் நிஜமாக மாறினால் என்னவாகும்? ஒரே கனவு மீண்டும் மீண்டும் வருவதுடன், அதில் நடக்கும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் அரங்கேறத் தொடங்கினால் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? இப்படியான எதிர்பாராத திருப்பங்களும், உளவியல் மர்மங்களும் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘வயலெட் கனவு’.
கிரைம் நாவல் உலகில் தனக்கென தனி வாசகர் பட்டாளத்தை உருவாக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை மற்றும் திரைக்கதையில், திரைப்படக் கல்லூரி மாணவரான பி. நித்தியானந்தம் இயக்கியுள்ள இப்படம், வித்தியாசமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுப...

