Thursday, September 24
Shadow

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் புதுமையான முயற்சி… ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் ‘வயலெட் கனவு’!

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் ‘வயலெட் கனவு’. பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு அவரே கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார்.

எம் 4 இண்டர்நேஷ்னல் வழங்கும் இப்படத்தை, அப்பு மூவிஸ் சார்பில் திருமதி. ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். திரைப்படக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் இப்படத்தை பி. நித்யானந்தன் B.A.D.F.T இயக்குகிறார்.

விவாந்த் – ரெய்னா ஜோடி

‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த், ‘வயலெட் கனவு’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அங்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ரெய்னா, இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர். அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.

இப்படத்திற்கு ஜெகன் கல்யாண் இசையமைக்கிறார். கீதாகரண் B.V.A ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம். சயீப் B.V.A படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுதுகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளை ஏ.எக்ஸ்.என். பிரகாஷ் வடிவமைக்க, நடனக் காட்சிகளை சவால் ராம் அமைக்கிறார். ஆடை வடிவமைப்பை அசோக் கவனிக்கிறார். ஒப்பனையை பிரேமா மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக கே. தங்கராஜ் பணியாற்றுகிறார். தர்மதுரை & சுரேஷ்சுகு மக்கள் தொடர்பு பணிகளை மேற்கொள்கின்றனர். துரை விநாயகமூர்த்தி கிராபிக்ஸ் வடிவமைப்பை கவனிக்கிறார்.

1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதிய ராஜேஷ்குமார்

கிரைம் நாவல் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய ராஜேஷ்குமார், இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதியுள்ளார். அவரது பல்வேறு படைப்புகள் தற்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களாக உருவாகி வருகின்றன.

அந்த வரிசையில், அவரது முக்கியமான கிரைம் திரில்லர் நாவலை மையமாக வைத்து ‘வயலெட் கனவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சஸ்பென்ஸ், பரபரப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு புதிய கிரைம் திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, படத்தின் பெரும்பாலான பணிகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது இப்படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் ‘வயலெட் கனவு’ படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலரை வழக்கமான முறையிலிருந்து மாறுபட்ட வகையில் பிரமாண்டமாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

A New Crime Thriller from Film College Students – Rajesh Kumar’s ‘Violet Kanavu’ Takes Shape!

A new crime thriller titled ‘Violet Kanavu’ is currently being made through the collaborative efforts of film college students. Based on a story by renowned crime novelist Rajesh Kumar, the film also features his screenplay and is being developed as a suspense-filled thriller.

Presented by M4 International, the film is produced by Mrs. A. Musthari M.Sc and Babu Thuyavan B.Com D.F.T under the banner of Appu Movies. The film is directed by P. Nithyanandhan B.A.D.F.T.

Vivaanth and Reyna Lead the Cast

Vivaanth, who played the second lead in Paris Jeyaraj, plays the protagonist in Violet Kanavu. Reyna, who played the female lead in Angaaran, stars opposite him as the female lead.

The film also features Samson, Jegadish, Nisha, Yaar Kannan, R. Aravindaraj, Ramnath and Krish Rao, among others, in important roles.

Jegan Kalyan is composing the music, while Geethakaran B.V.A handles the cinematography. A.M. Saif B.V.A is the editor and Sridhar is the art director. Bhaskar Raj has penned the dialogues.

Action sequences are choreographed by A.X.N. Prakash, while Saval Ram handles the dance choreography. Ashok is the costume designer and Prema is the makeup artist. K. Thangaraj serves as the executive producer, while Dharmadurai & Sureshsugu are the PROs. Durai Vinayagamoorthy is the graphics designer.

A Rajesh Kumar Crime Thriller Adaptation

With more than 1,000 crime novels to his credit, Rajesh Kumar has established a distinctive place for himself in the world of crime fiction. Several of his works are now being adapted into films and web series.

Violet Kanavu is based on one of Rajesh Kumar’s notable crime thriller novels and is being developed with suspense, mystery and unexpected twists at its core.

The fact that the film is being created through the collective efforts of film college students has generated additional interest around the project. The team is aiming to offer audiences a fresh and engaging crime thriller experience on screen.

The production is currently progressing at a brisk pace. The makers are planning to release ‘Violet Kanavu’ in theatres in October. Before the theatrical release, the team is also planning to unveil the film’s first look and trailer in a grand and distinctive manner.