தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டி
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நக்கலாக விமர்சித்து பேசியதற்காக விஷாலை, தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தது. இந்த சஸ்பெண்டை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கையை ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்தது.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல் முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலை மீண்டும் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது.
இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் இதுவரையில் சஸ்பெ...
