கேளிக்கை வரி அதிகரிப்பு தமிழக அரசு மீது விஷால் கொந்தளிப்பு???
அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.
அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா ?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம்.
வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை .ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்க...
