சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்
விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் அனு இம்மானுவேல், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதையாக `துப்பறிவாளன்' உருவாகி வருகிறது. படத்தில் அறிவுப் பூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு ஒரு மெல்லிய காதல் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.
அருள் கொரோல்லி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஷால் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அ...
