Monday, April 20
Shadow

Tag: #vishwaroobam #kamalhaasan

​விஸ்வரூபம் பாடலை பாடிய ரப்பர் தோட்ட தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

​விஸ்வரூபம் பாடலை பாடிய ரப்பர் தோட்ட தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

Latest News, Top Highlights
ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர், விஸ்வரூபம் பாடலை பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டினார். கேரளாவில் ரப்பர் தோட்ட தொழிலாளி ராகேஷ் நுரநாடு என்பவர், விஸ்வரூபம் படத்தின் பாடல் ஒன்றை எந்தவித இசைக்கருவிகளின் உதவியுமின்றி பாடி, இணையதளத்தில் வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், அவரை சென்னைக்கு வரவழைத்துப் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மரம் சுமக்கும் தொழிலாளியான ராகேஷ், பயிற்சி இல்லாமலேயே சிறப்பாக பாடுவதாகவும், அவருக்கு தனது அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு அளிப்பேன், என்றும் தெரிவித்தார். முன்னதாக, கமல் முன்னிலையில், கேரள இளைஞர் ராகேஷ், விஸ்வரூபம் படப் பாடலை பாடி காண்பித்தார்....