Thursday, October 29
Shadow

Tag: #viswasam #ajith #boxoffice #siva #sathyajothi #nayanthara #rajesh #kjr

கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் அஜித்தின் விஸ்வாசம்

கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் அஜித்தின் விஸ்வாசம்

Latest News, Top Highlights
சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் ஜோடி சேர்ந்த படம் ‘விஸ்வாசம்’. கடந்த பொங்கல் திருவிழாவை ஒட்டி, ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. இதனால் வலுவான பாக்ஸ் ஆபிஸ் மோதல் ஏற்பட்டது. வெளிநாடுகளில் ரஜினி கொடி பறந்தாலும், தமிழ்நாட்டில் அஜித்தை அடிச்சிக்க முடியவில்லை. தமிழக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ நல்ல வசூலை ஈட்டி வந்தது. இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, விவேக், கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு எனத் தொடர்ந்து ஏழாவது வாரமாக திரையரங்குகளில் ‘விஸ்வாசம்’ ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் இன்று ஐம்பதாவது நாளை கொண்டாடுகிறது....