இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லர் தான் விவேகம் சொன்னது யார்
ஒரு சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட சர்வதேச தர தமிழ் படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும். 'விவேகம்' படத்தின் கலை இயக்குனர் திரு.மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இப்படத்தில் அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 'விவேகம்' குறித்து இப்படத்தின் கலைஇயக்குனர் மிலன் பேசுகையில், '' 'விவேகம்' படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் ...
