சென்னையில் விவேகம் வசூலில் செய்த புதிய சாதனை
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. சென்னையில் முதல் நாளில் 'கபாலி', 'தெறி' ஆகிய படங்களின் சாதனையை முறியடித்து 1.21 கோடி வசூல் செய்தது.
2-ம் நாளில் 1.51 கோடி வசூல் செய்து, சென்னையில் ஒரு நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை 'விவேகம்' நிகழ்த்தியது. தற்போது 3-ம் நாளில் 1.52 கோடி வசூல் செய்து 2-ம் நாள் சாதனையை முறியடித்துள்ளது. மொத்தமாக 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்துள்ளது.
சென்னையில் முதல் வார வசூல் பெரும் சாதனையை நிகழ்த்தும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளார்கள். விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் குறைவில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்கள்.
ஐந்தாம் நாள் மட்டும் நேற்று ஒரு கோடியே நாற்பத்தியேழு லட்சம் வசூல் செய்து மொத்தம் ஐந்து நாளில் 5.75 கோடி வசூல் செய்து சாதனை புரிந்...

