
ஆபாச இணையதளத்தின் பெயரில் உருவாகும் தமிழ்ப்படம் “எக்ஸ் வீடியோஸ்
ஆமாம் இது ஆபாசப் படம்
தான் என்று தைரியமாகக் கூறுகிறார் "எக்ஸ் வீடியோஸ்" படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர்.
மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது .
"பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை," என்கிறார் இயக்குநர்.
"இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.’’
இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் ந...