மேலும் ஒரு நடிகர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு
இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஏ.ஆர். ரெஹானா 'யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில் தயாரித்து, இசையமைத்துள்ள படம் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல'. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படத்தின் இசை சென்னையில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பாக்யராஜ் இசையை வெளியிட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பெற்றுக் கொண்டார்.
நான் டொரோண்டோ போனபோது எனக்கு கிடைத்த அறிமுகம் தான் சுபா மேடம். ஒரு படம் தயாரிக்கணும், டைரக்டர் தேர்வு செய்ய சொன்னார். அப்படி உருவான படம் தான் 'ஏண்டா தலைல எண்ண வெக்கல'. இந்த வெயில் சீசன்ல எல்லா வீட்லயும் கேக்குற ஒரு கேள்வி 'ஏண்டா தலைல எண்ண வெக்கல'. எல்லோரும் தலைக்கு எண்ண வெச்சிட்டு போங்க, உடம்புக்கு நல்லது என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா.
கலா மாஸ்டரிடம் 3 ஆண்டுகள் டான்ஸ் கற்றுக் கொண்டவன...
