
போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்தார் மீரா மிதுன்
அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் குறும்பட பிரபல நாயகன் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் படம் 'போதை ஏறி புத்தி மாறி'. இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து நடிகை மீரா மிதுன் கூறுகையில், இந்த படம் 'தடம்' மாதிரி ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் படம். தலைப்புக்கு உண்டான சம்பந்தத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்....