யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரைக்கு வருகிறது!
யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரைக்கு வருகிறது!
வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படம் – புதிய போஸ்டர் வெளியீடு!
யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படம், யோகி பாபுவின் திரைப்பயணத்தில் 300வது திரைப்படம் என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது.
வாகனத் திருட்டு மாஃபியாவைச் சுற்றி நகரும் கதை!
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்க இளைஞன் ஒருவன், தனது முயற்சியால் ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அவனது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் ...

