2019-ல் அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
கடந்தாண்டு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் நடித்துள்ள "கே 13" இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வரும் ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு "யு/எ" சான்றிதழ் வழங்கியு...