யோகிபாபு மற்றும் யாஷிகா நடிக்கும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ படம் 3D தொழில்நுட்பத்தில்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
"இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனு...
