Monday, April 27
Shadow

Tag: #yogida #saidhanshika #gowthamkrishna #arunagiri #rajkumar #kabersing #sayajishinde #manobala

கபாலி புகழ் தன்ஷிகா நடிக்கும்  “யோகி டா “

கபாலி புகழ் தன்ஷிகா நடிக்கும் “யோகி டா “

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் 'யோகி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. ஒரு ஆணுக்கு இனையான கம்பீர தோற்றத்துடன் கிராப் தலையுடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொஃபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்துள்ளது. ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் "யோகி டா" என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை கதாந...