Sunday, April 19
Shadow

Tag: Zac Efron and Alexandra Daddario.

தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘ பேவாட்ச் ’

தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம் ‘ பேவாட்ச் ’

Latest News
இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச் ’படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. இது குறித்து இப்படத்தை தமிழில் வெளியிடும் Huebox Studios Pvt Ltd நிறுவனம் வெளியிட்டு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.. நடிகை பிரியங்கா சோப்ரா, இளைய தளபதி விஜய் நடித்த ‘தமிழன் ’என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானவர். அவருடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும். இவர் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். ‘பேவாட்ச்’ என்பது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிரபலமான தொலைகாட்சி தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தழுவி அதே பெயரில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகியிருக்கிறது...