ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?
குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். நாயகியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார்.
இவர் எமிஜாக்சன் உள்பட பல பிரபல நடிகை களுக்கு டப்பிங் பேசி வருபவர். இவர்களுடன் கவிஞர் விக்ரமதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சு மிட்டாய் ஆறுமுகம் உள்பட 40 நடிகர் -நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ளார்.
இவர் மணிகண்டனின் குறும் படங்களுக்கு இசையமைத்தவர். வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறுகையில்,
ஒரு கிடாயின் கருணை மனு படம் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே இல்லாமல் இந்த படத்தில் ந...
