கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளன நாளை (ஜூலை 28ம்) வெளியாக உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர்.
துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோ...
