கயிறு திரை விமர்சனம் (பாடம்) Rank 3.5/5
இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம். ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கதையுடனும், உருவாக்கத்திலும் ரசிக்கும்படியாக உள்ளன. இந்தப் படத்தில் ஒரு மனிதனுக்கும், மாட்டிற்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பரம்பரை பரம்பரையாய் பூம்பூம் மாடு வைத்துக் கொண்டு ஜோசியம் சொல்லி பிழைப்பு நடத்துபவர் குணா. ஒரு பிரச்சினை க...
