மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் :நிகேஷா படேல்
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் என்று நடிகை நிகேஷா படேல் தெரிவித்து உள்ளார்.
இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்'. இந்தப் படத்தில் ஆரவ் நாயகனாக நடித்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் லேடி டானாக நடித்து வரும் இந்த படத்தில் காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நிகேஷா படேல் இணைத்துள்ளார்.
இது குறித்து நிகேஷா படேல் கூறுகையில், துணிச்சலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், திமிர் பிடித்த பெண்ணாக மற்றொரு நாயகியாக நடிப்பதாகவும் கூறியுள்ளார்....

