நடிகர் காகா இராதாகிருஷ்ணன் மறைந்த தின பதிவு
காக்கா இராதாகிருஷ்ணன் அல்லது காகா ராதாகிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட உலகின் ஒரு பழம்பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர். சிவாஜி கணேசனை மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர். 1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆறு அகவையில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில் சேர்ந்தார். இராதாகிருஷ்ணன் தன்னுடைய முதல் திரைப்படமான மங்கையர்க்கரசியில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அக்காலத்தில் அந்நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம். அதன் காரணமாகவே, இவர் காகா இராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.
அறுபது வயதுக...
