காத்துவாக்குல 2 காதல் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
பிறக்கும்போதே அப்பாவை இழந்து விடுகிறார் விஜய் சேதுபதி. அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடல் நிலை இன்னும் மோசமாகிறது. இப்படி அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நபராக இருந்து வரும் விஜய் சேதுபதிக்கு அவருடைய வாழ்க்கையில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவர் வருகின்றனர். பின்னர் எல்லாம் டபுள் டபுளாக கிடைக்கிறது. இதனால் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு கட்டத்தில் சமந்தா, நயன்தாரா யாரை பிடிக்கும் என கேட்க பிரபு நடத்தும் நிகழ்ச்சியில் கேட்க இருவரையுமே பிடிக்கும். இவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செய்து கொள்கிறேன் என விஜய் சேதுபதி கூறுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தத...
