சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கேமரா மியூசியம்..!
பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில் சென்னையில் அமைய உள்ள நிரந்தர கேமரா மியூசியத்தின் பிரமாண்டம் பிரமிப்பை தருகிறது.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது.
இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும். புகைப்பட கலையையும் அதன் வரலாற்றையும் தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படம...
