Thursday, May 14
Shadow

Tag: ஜோடியாக

இந்தியன் 2-வில் ராகுல் பிரித் சிங்க்கு ஜோடியாக நடிப்பது யார்?

Latest News, Top Highlights
  நடிகை ராகுல் பிரித் சிங், அண்மையில் வெளியான சூரியாவின் என்ஜிகே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கம் இந்த படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளார். அனிருத் இசை அமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியன் 2-வில் ராகுல் பிரித் சிங்க்கு ஜோடியாக பிரபல நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடிக்க ஆசை: அக்சரா ரெட்டி

Latest News, Top Highlights
முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாக அழகி அக்சரா ரெட்டி தெரிவித்தது உள்ளார். கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்திற்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019’ பட்டத்தை வென்றார். இதனையடுத்து வரும் அக்டோபர் 17மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019’ பட்டத்திற்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்....
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

Latest News, Top Highlights
  'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார். நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக மடோனா செபாஸ்டியனும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். இந்த படத்தில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந...